வெறும் ரூ.8199 போதும்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. சாம்சங் போனுக்கு ஆஃபர்.. எந்த மாடல்?
இயர் எண்ட் சேல் (Year End Sale) எனும் சிறப்பு விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போனுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.8,199 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீதம் உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் சாம்சங் கேலக்ஸி எப்13 போனின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

அம்சங்கள் 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்ப்ளே 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5(Gorilla Glass 5) உடன் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 850 (Exynos 850) சிப்செட் மூலம் இயங்குகிறது இந்த சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 6000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ac, ப்ளூடூத் வி5.0, GPS/ A-GPS, யூஎஸ்பி டாய்-சி மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டிவிருப்பங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன்.
குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் சாம்சங் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications








