Home
Mobile

வெறும் ரூ.10,999 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் சாம்சங் போன்.. எந்த மாடல்?

இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் சாம்சங் போன்கள் வெளிவருகின்றன. எனவே தான் இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எப்13 மாடலுக்கு தற்போது 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.10,999 விலையில் வாங்க முடியும்.

வெறும் ரூ.10,999 போதும்.. ஆஃபரில் சாம்சங் போன்.. எந்த மாடல்?

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை 10 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்13 அம்சங்கள் (Samsung Galaxy F13 specifications): சக்திவாய்ந்த ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 850 (Exynos 850)சிப்செட் மூலம் இயங்குகிறது இந்த சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன்.இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

வெறும் ரூ.10,999 போதும்.. ஆஃபரில் சாம்சங் போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்13 மாடல் 6.6 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்ப்ளே 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5(Gorilla Glass 5) உடன் பாதுகாக்கப்படுகிறது.குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

6000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரி சார்ஜிங் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ac, ப்ளூடூத் வி5.0, GPS/ A-GPS, யூஎஸ்பி டாய்-சி மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போன். குறிப்பாக 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F13 is available at 26 percent discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X