Samsung Galaxy F13 முதல் விற்பனை எப்போது தெரியுமா? என்னென்ன சலுகைகள்? மிஸ் பண்ணிடாதீங்க
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன மொபைல் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

எப்போது விற்பனை?
மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எஃப்13 (Samsung Galaxy F13) ஸ்மார்ட்போனின் விற்பனை தேதி குறித்த
தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்13 போன் வரும் ஜூன் 29-ம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில்
விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன அம்சங்கள்
அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி, எக்ஸிநோஸ் 850 சிப்செட் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் அதிகளவில்விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த கேலக்ஸி எப்13 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வியக்கவைக்கும் விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.
அதேபோல் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டுஇந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த அதிநவீன ஸ்மார்ட்போனை ரூ.10,999-விலையிலும் வாங்க முடியும். குறிப்பாக விலைக்கு தகுந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

தரமான டிஸ்பிளே
அதாவது சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1080x2408 பிக்சல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
குறிப்பாக நைட்ஸ்கை கிரீன், சன்ரைஸ் காப்பர் மற்றும் வாட்டர்ஃபால் ப்ளூ நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலைக்கு தகுந்த கேமரா வசதி
இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதி உள்ளது. எனவே அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால்பட்ஜெட் விலைக்கு தகுந்த கேமரா வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அதிநவீன ஸ்மார்ட்போன். மேலும் இதன் கேமராவை விட மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

சூப்பரான சிப்செட்.. நம்பி வாங்கலாம்
சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த எக்ஸிநோஸ் 850 சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் கேமிங் வசதிக்கு மிக அருமையாக பயன்படும். எனவே இந்த போனை நம்பி வாங்கலாம். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி
அதேபோல் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ac, ப்ளூடூத் வி5.0, GPS/ A-GPS, யூஎஸ்பி டாய்-சி மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டிவிருப்பங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் சிறப்பான கேமரா வசதி, தரமான டிஸ்பிளே, 6000 எம்ஏஎச் பேட்டரி எனப்
பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications