பிளிப்கார்ட்: சாம்சங் கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி.! உடனே முந்துங்கள்.!
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் சாம்சங் கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போனுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த சாதனத்திற்கு ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த சலுகையின் மூலம் கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போனை ரூ.10,000-க்குள் கொண்டுவருகிறது.

குறிப்பாக இப்போது ரூ.10,000-க்குள் வாங்க சிறந்த ஸ்மார்ட்போன்களில் சாம்சங் கேலக்ஸி எஃப்12 மாடல் உள்ளது. அதேபோல் இந்த சாதனம் 64ஜிபி மற்றும் 128ஜிபி என இரண்டு மெமரி வகைகளில் வெளிவந்துள்ளது. மேலும் ஐசிஐசிஐ வங்கிகார்டுகளை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய 1000 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்குகிறது பிளிப்கார்ட்.

எனவே இந்த சலுகையின் மூலம் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போனை ரூ.9,999-விலையிலும், பின்பு இதன் 128ஜிபி வேரியண்டை ரூ.10,999-க்கும் வாங்க முடியும். இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

டயமண்ட் ப்ளூ, டயமண்ட் ஒயிட் மற்றும் டயமண்ட் பிளாக் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான கேலக்ஸி எஃப்12 ஸ்மார்ட்போன். பின்பு இதில் உள்ள எக்ஸினோஸ் 850 சிப்செட் வசதியானது பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதாவது கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்12 அம்சங்கள்
டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்கள்)
20:9 என்ற திரைவிகிதம்
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
சிப்செட்: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் ஆதரவுடன் எக்ஸினோஸ் 850 ஆதரவு உள்ளது.
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
இரட்டை சிம், புளூடூத் 5.0, வைஃபை,
ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி
3.5 மிமீ ஆடியோ ஜாக்
எடை: 221 கிராம்


Click it and Unblock the Notifications