Home
Mobile

மிரளுது ஆர்டர்.. மட்ட ரேட்ல 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Samsung ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த பிராண்ட்டின் எப் சீரிஸ் மாடல்கள் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் கிடைத்து விற்பனையில் பட்டையை கிளப்பி வருகின்றன. இதில் சாம்சங் கேலக்ஸி எப்07 (Samsung Galaxy F07) ஸ்மார்ட்போனானது தள்ளுபடி விலையில் அதைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் சிறப்பு விற்பனையில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போனுக்கு 4 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,050 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,449 விலைக்கு வாங்கலாம்.

மிரளுது ஆர்டர்.. மட்ட ரேட்ல  50MP கேமரா, 5000mAh பேட்டரி.. மாடல்?

ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைப்பதால், பீச்சர்கள் மற்றும் டிசைனில் பெரிதாக சாம்சங் நிறுவனம் கவனம் செலுத்தி இருக்காது என்று நினைக்க வேண்டாம். பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான டிசைன் மட்டுமல்லாமல், 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, மீடியாடெக் சிப்செட் போன்ற பீச்சர்களுடன் இந்த கேலக்ஸி எப்07 மாடல் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்07 அம்சங்கள் (Samsung Galaxy F07 Specifications): இந்த விலைக்கு ஏற்ப 6.7 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. அதேபோல எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவொரு பிஎல்எஸ் (PLS) டிஸ்பிளே மாடலாக இருக்கிறது.

வாட்டர் டிாாப் நாட்ச் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த டிசைனுடன் பிக்சட் போகஸ் (Fixed Focus) சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

மேலும், ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 10X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஹைப்பர்லேப்ஸ் மோட் (Hyperlapse Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) உள்ளிட்ட கேமரா பீச்சர்களை இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. ஆகவே, கேமரா பிரியர்களுக்கு ஏற்ப இருக்கும்.

4ஜி சிப்செட் கொண்ட மாடலாக உள்ளது. ஆகவே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 (Octa Core MediaTek Helio G99) சிப்செட் பேக் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. குயூக் ஷேர் (Quick Share), ஸ்மார்ட் ஸ்விட்ச் (Smart Switch), க்நாக்ஸ் செக்யூரிட்டி பீச்சர்களுடன் ஒன் யுஐ 7.0 (One UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (ARM Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. 7.6 மிமீ தடிமன் மற்றும் 184 கிராம் எடை கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-Fingerprint Sensor) கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F07 With 50MP Camera is Available At Discounted Price Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X