பொளக்குது விற்பனை.. ரூ.11,399 ரேட்ல SAMSUNG போன்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் ஸ்மார்ட்போனை மட்ட ரேட்டில் வாங்கி வேண்டுமானால், பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் தள்ளுபடியை பயன்படுத்தி கொள்ளலாம். பிரீமியம் லுக் மட்டுமல்லாமல் 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி எப்07 (Samsung Galaxy F07) பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.11,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.600 தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு தள்ளுபடியாக கொடுக்கப்படுகிறது. ஆகவே ரூ.11,399 விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். 3 மாதங்களுக்கு நோ-காஸ்டு ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்07 அம்சங்கள் (Samsung Galaxy F07 Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 (Octa Core MediaTek Helio G99) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மலிவான விலையிலும் 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.
ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (ARM Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போன் இருக்கிறது. குயிக் ஷேர் (Quick Share) மற்றும் ஸ்மார்ட் ஸ்விட்ச் (Smart Switch) உள்ளிட்ட பீச்சர்களுடன் ஒன் யுஐ 7.0 (One UI 7.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 6.7 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி எப்07 கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 16 மில்லியன் கலர் டெப்த் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதுவொரு பிஎல்எஸ் (PLS) டிஸ்பிளே மாடலாக உள்ளது. ஆகவே, இந்த பட்ஜெட்டிலும் பக்கா டிஸ்பிளே அவுட்புட்டை பெற்று கொள்ளலாம். 5000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த பேட்டரியுடன் வெறும் 7.6 மிமீ தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. ஆகவே, ஸ்லிம் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கும் ஏற்ற மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். மொத்தமாக 184 கிராம் எடை கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்ட மாடலில் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிகது. மேலும், ஆட்டோ போகஸ் (Auto Focus) உள்ளது. பட்ஜெட்டிலும் 10X டிஜிட்டல் ஜூமிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேக ஹைப்பர்லேப்ஸ் மோட் (Hyperlapse Mode) கொடுக்கப்பட்டு உள்ளது.
போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கிடைக்கிறது. பிக்சட் போகஸ் (Fixed Focus) சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. சைடு-மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-Fingerprint Sensor) மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கிடைக்கிறது. கிரீன் (Green) கலரில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
