போடு தீபாவளி ஆஃபர்ல.. ரூ.6,411-க்கு சாம்சங் போன்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?
தீபாவளி பண்டிகைக்கு மலிவான விலைக்கு ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டருந்தால், பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எப்07 (Samsung Galaxy F07) ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 50MP கேமரா, 5000mAh பேட்டரி, IP54 ரேட்டிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் எம்ஆர்பி விலை ரூ.7,699ஆக இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக ரூ.6,749 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.338 மதிப்பில் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.6,411 பட்ஜெட்டில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்07 அம்சங்கள் (Samsung Galaxy F07 Specifications): இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) பிஎல்எஸ் எல்சிடி (PLS LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. IP54 ரேட்டிங் உள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்ஓசி (Octa Core MediaTek Helio G99 SoC) மற்றும் இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (ARM Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் கனவிலும் எதிர்பார்க்காதபடி 6 ஜென் ஓஎஸ் (Gen OS Upgrades) கொடுக்கிறது. அதேபோல 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) வருகிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 7.0 (One UI 7.0) ஆகியவற்றுடன் லேட்டஸ்ட் யுஐ அனுபவத்தை இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் கிடையாது.
இருப்பினும், ஆட்டோ போகஸ் (Auto Focus) மட்டுமல்லாமல், 10X டிஜிட்டல் ஜூமிங் கொடுக்கிறது. இந்த பட்ஜெட் கேமராவிலும் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஹைப்பர்லேப்ஸ் (Hyperlapse), நைட் (Night), பனோரமா (Panorama), போர்ட்ராய்டு (Portrait), ப்ரோ (Pro) மற்றும் ஸ்லோவ் மோஷன் (Slow Motion) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
பிக்சட் போகஸ் (Fixed Focus) மற்றும் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போனில் 64 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், கூடுதல் ஸ்டோரேஜ் கொடுக்க 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (micro SD Card Slot) கிடைக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano Sim Slot) உள்ளது.
இந்த கேலக்ஸி எப்07 ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.6 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. அதேபோல 184 கிராம் எடை மட்டுமே உள்ளது. சைடு-பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-Fingerprint Sensor) மட்டுமல்லாமல், லைட் சென்சார் (Light Sensor), ப்ராக்சிமிடி சென்சார் (Proximity Sensor) கிடைக்கிறது. கிரீன் (Green) கலரில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








