அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. கம்மி விலை.. இந்தியாவுக்கு வரும் புது Samsung 5G போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுககும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் கூடிய விரைவில் சாம்சங் கேலக்ஸி எப்06 (Samsung Galaxy F06) என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதாவது சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா சிஸ்டம், பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே உள்ளிட்ட வசதிகளுடன் வெளிவரும். மேலும் அக்வா-லைக் ப்ளூ நிறத்தில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்06 அம்சங்கள் (Samsung Galaxy F06 specification): 6.7-இன்ச் எச்டி பிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஒன் யுஐ 7 (One UI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

5000mAh பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
அதேபோல் 5G, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் இந்தியாவில் ரூ.9,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications