Home
Mobile

இதுதான் புதிய Samsung போன்.. 50MP கேமரா.. 25W சார்ஜிங்.. 128ஜிபி மெமரி.. LCD டிஸ்பிளே.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி எப்06 (Samsung Galaxy F06) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது மற்ற சாம்சங் போன்களை விட சற்று வித்தியாசமான வடிவமைப்புடன் இந்த கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் டூயல் ரியர் கேமராக்கள் இந்த போனில் உள்ளன. பின்பு பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே டிசைனில் (Punch-hole Display Design) இந்த போன் வெளிவரும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் புதிய Samsung போன்.. 50MP கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்06 அம்சங்கள் (Samsung Galaxy F06 Specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதி உள்ளது.

அதேபோல் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக சாம்சங் மீடியாடெக் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இதுதான் புதிய Samsung போன்.. 50MP கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?

5000mAh பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே நாள் முழுவதும் இந்த போன் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவாக இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியும்.

வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த புதிய சாம்சங் போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதாவது ரூ.12,000 பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி எப்06 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

photo credit: smartprix, gizmochina, samsung

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F06 images and specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X