ஆர்டர் பொளக்கும்.. ரூ.10000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த பட்ஜெட் பிரியர்களையும் தட்டித் தூக்கும்படியான அடிமட்ட விலைக்கு சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G) போன் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, பிளிர்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது, பட்ஜெட் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி போனின் பீச்சர்கள் எப்படி இருக்கும்? எப்போது வெளிாகும்? எந்த விலைக்கு எதிர்பார்க்கலாம் உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எப் சீரிஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், இந்த சீரிஸில் அடிமட்ட பட்ஜெட்டில் மாடல்கள் வெளியாகின்றன. அப்படி, சாம்சங் கேலக்ஸி எப்05 போனானது, வெறும் ரூ.7000 பட்ஜெட்டில் வெளியாகியது. அதிலும் 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், லெதர் பேக் பேனல் கொடுத்தது.

இதனால், விற்பனையிலும் சக்கைப்போடு போட்டது. இருப்பினும், இதே பட்ஜெட் மற்றும் பீச்சர்களுடன் 5ஜி சிப்செட் கொண்ட மாடல் கிடைத்தால், நன்றாக இருக்குமே என்று சாம்சங் பிரியர்கள் நினைத்தனர். இதற்கும் இப்போது நேரம் வந்துவிட்டது. இந்திய மார்கெட்டில் சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி அடிமட்ட பட்ஜெட்டில் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் இந்த சாம்சங் போன் விற்பனைக்கு வரும் என்பதையும் ரூ.10000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்பதையும் சாம்சங் நிறுவனம் உறுதி செய்துள்ளது. டூயல் கேமரா சிஸ்டம், அக்வா-லைக் ப்ளூ போன்ற கலர் கொண்ட போனின் டிசைனை வெளியிட்டு இருக்கிறது. ஆனால், வெளியீட்டு தேதி மற்றும் பீச்சர்கள் வெளியாகவில்லை. இருப்பினும், விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.
அதன்படி, இந்த சாம்சங் போன் ஓரிரு வாரங்கள் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எப்05 போனில் கிடைத்த பீச்சர்கள் இதில் எதிர்பார்க்கலாம். ஆனால், சிப்செட் மட்டும் 5ஜி வெர்ஷனாக இருக்கும். அதேபோல டிசைன் மற்றும் கலர் வேரியண்ட்களில் மாற்றம் இருக்கும். கேமரா பம்ப் இருப்பதை அதிகாரப்பூர்வமாக வெளியான போட்டோ உறுதி செய்கிறது.
சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F06 5G Specifications): இந்த பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. எச்டிபிளஸ் (HD+) மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வரலாம். மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் சாம்சங்கின் ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்க இருக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வரவேற்கத் தக்கதாக இருக்கப்போகிறது. ரூ.10,000 பட்ஜெட்டில் இருப்பதால், 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் வேரியண்ட்களில் ஆரம்ப மாடல்கள் கிடைக்கும். இருப்பினும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் கட்டாயம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஏனென்றால், முந்தைய மாடலான சாம்சங் கேலக்ஸி எப்05 போனில் எஸ்டி சிலாட் கிடைத்தது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதேபோல 5,000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டம் கிடைக்கிறது. ரூ.9999 பட்ஜெட்டில் ஆரம்ப மாடலின் விலை இருக்கும். அதற்கு மேல் மாடல்கள் இருந்தால், ரூ.12,999 பட்ஜெட் வரை செல்லலாம்.


Click it and Unblock the Notifications








