Home
Mobile

தங்கத்த தூக்குவீங்க.. ரூ.10000 போதும்.. 50MP கேமரா.. HD+ டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங்!

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே மிரளும்படியான பட்ஜெட்டில் 50 எம்பி மெயின் கேமரா, எச்டிபிளஸ் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல் 4 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களுடன் சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G) வர இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி உறுதியாகி இருப்பதால், சாம்சங் பிரியர்கள் வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி போன் வெளியீட்டு தேதி, பீச்சர்கள் இதோ.

பிப்ரவரி 12ஆம் தேதி இந்த சாம்சங் போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. டிசைன், கேமரா, சிப்செட் மற்றும் ஓஎஸ் அப்டேட்கள் வெளியாகி இருக்கின்றன. ரூ.10000 செக்மெண்ட்டில் வெளியாக இருப்பது உறுதியாகி இருந்தும் 4 ஓஎஸ் அப்டேட்களை கொடுத்து பட்ஜெட் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது.

தங்கத்த தூக்குவீங்க.. ரூ.10000 போதும்.. 50MP கேமரா.. HD+ டிஸ்பிளே!

சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F06 5G Specifications): இந்த சாம்சங் போனில் 6.7 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. வாட்டர் டிராப் டிசைனில் செல்பீ ஷூட்டர் இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது.

8 எம்பி செல்பீ ஷூட்டர் இருக்கிறது. ஃபிரேம் மற்றும் பேக் பேனலில் டூயல் கலர் டோன் கொடுக்கிறது. பகாமா ப்ளூ (Bahama Blue) மற்றும் லிட் வயலெட் (Lit Voilet) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. 5,000mAh பேட்டரி பேக் செய்துள்ளது.

இந்த பேட்டரிக்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வருகிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இந்த ஆண்ட்ராய்டு 15 மட்டுமல்லாமல், 4 ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம். இதுபோக 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. மேலும், ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது. 12 பேண்ட்களில் 5ஜி கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

மற்ற பீச்சர்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.10000 பட்ஜெட்டில் இந்த பீச்சர்கள் கூடுதலாகவே இருக்கின்றன. அதிலும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி டூயல் கலர் டோனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் பிரீமியம் லுக் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கும் இந்த போன் பக்கா ஆப்ஷனாக இருக்கும். பிப்ரவரி 12ஆம் தேதி பட்டையை கிளப்பும்.

முன்னதாக சாம்சங் கேலக்ஸி எப்05 போன் வேகன் லெதர் பேனலுடன் வெளியானது. இருப்பினும், வெறும் ரூ.7000 பட்ஜெட்டில் வெளியாகி விற்பனையில் பட்டையை கிளப்பியது. இப்போது, 5ஜி கனெக்டிவிட்டியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி போன் கிடைக்க இருப்பதால், மேலும் விற்பனையில் பின்னிப்பெடல் எடுக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F06 5G With 50MP Camera To Launch February 12 Sale From Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X