Home
Mobile

அசூர விற்பனை.. வெறும் ரூ.9,499 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

அடிமட்ட பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், எச்டிபிளஸ் டிஸ்பிளே, 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 1 டிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G) போனின் விற்பனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தொடங்கிவிட்டது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களுக்கு செல்வோம்.

சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F06 5G Specifications): இந்த போன் அடிமட்ட பட்ஜெட்டில் களமிறங்கி இருந்தாலும், டிசைனானது பிரீமியம் லுக் கொடுக்கிறது. இதுபோக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்து, அதற்கு 4 ஜெனரேஷன் அப்டேட் கொடுக்கிறது. அதேபோல 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்கிரேட்களையும் கொடுக்கிறது.

அசூர விற்பனை.. வெறும் ரூ.9,499 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி!

மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு சாம்சங் என்னும் பிராண்ட்டுடன் டைமன்சிட்டி 6300 சிப்செட் கிடைப்பது வரவேற்க வேண்டியது. 6 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் இருக்கிறது.

இதேபோல 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த வேரியண்ட்களில் கூடுதல் ஸ்டோரேஜ் சப்போர்ட் கொடுப்பதற்காக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் எச்டிபிளஸ் ( HD+) சப்போர்ட் உள்ளது.

மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 7 (One UI 7) மற்றும் பட்ஜெட் அவுட்புட் எதிர்பார்க்கும்படி மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + எல்இடி ஃபிளாஷ் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி போனில் ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual SIM Slot), மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கிடைக்கிறது. மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) கிடைக்கிறது.

ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சாம்சங் மாடல்களை போலவே இதிலும் 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8 எம்எம் தடிமனில் பாடி இருக்கிறது. 191 கிராம் எடை வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது.

இருப்பினும், ரூ.500 பேங்க் டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.9,499 விலைக்கு கிடைக்கிறது. அதேபோல ரூ.11,499 விலை கொண்ட 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.500 பேங்க் டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.10,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. பஹாமா ப்ளூ (Bahama Blue) மற்றும் லிட் வயலெட் (Lit Violet) ஆகிய கலர்களில் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F06 5G With 50MP Camera Sale Under Rs 10000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X