ஆளுக்கு 2 வாங்குறாங்க.. ரூ.8000 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி, 50MP கேமரா.. 25W சார்ஜிங் கொண்ட Samsung 5ஜி போன்!
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G) ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த கேலக்ஸி எப்06 5ஜி ஆனது 5000mAh பேட்டரியை கொடுத்து, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் வழங்குகிறது. பீச்சர்கள் மற்றும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.
இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9,499ஆகவும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிகார்ட் விற்பனையில் 4ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.8,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.
மேலும், ரூ.450 கிரெடிட் கார்டு தள்ளுபடி போக வாங்கி கொள்ளலாம். ஆகவே, ரூ.8,549 விலைக்கு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. பஹாமா ப்ளூ (Bahama Blue) மற்றும் லிட் வயலட் (Lit Violet) கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F06 5G Specifications): சாம்சங் பிரியர்கள் விரும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கொண்டுள்ளது. 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் மட்டுமல்லாமல், இப்போது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கிறது. ஒன் யுஐ 7 (One UI 7) இதில் கிடைக்கிறது.

ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுத்துள்ளது. 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டை இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி கொள்ளலாம். டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) கிடைத்துள்ளது. எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) கூடுதலாக கிடைக்கிறது. டூயல் கேமரா செட்டப் (Dual Camera Setup) கொண்டுள்ளது.
ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கிறது. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமராவையும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த விலைக்கு ஏற்ப டிஸ்பிளே கிடைத்துள்ளது. ஆகவே, 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைத்துள்ளது. மேலும், 90 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. இருப்பினும், ஸ்லிம் டிசைன் கிடையாது.
ஏனென்றால், 8 எம்எம் தடிமன் உள்ளது. மேலும், 191 கிராம் எடை கொண்டுள்ளது. சைடு பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி போனில் 12 பேண்ட்களுடன் 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, வை-பை 802, ப்ளூடூத் 5.3 மற்றும் ஜிபிஎஸ் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








