Home
Mobile

இதுதான் ஆஃபர்.. ரூ.7,999 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. Samsung 5ஜி போன் வாங்க சரியான நேரம்..

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart GOAT Sale 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்புபு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

இதுதான் ஆஃபர்..  Samsung 5ஜி போன் வாங்க சரியான நேரம்..

சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F06 5G specification): 6.7-இன்ச் எச்டி பிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன் யுஐ 7 (One UI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளன.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ்இ யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

அதுவும் 5000mAh பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் மலிவு விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F06 5G is available at discounted price in Flipkart GOAT sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X