Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர் விழுது.. ரூ.7,599 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்6 5ஜி (Samsung Galaxy F06 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் 4 ஜெனரேஷன் ஓஎஸ், 4 வருட செக்யூகிட்டி அப்டேட்கள் மட்டுமல்லாமல், 5000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எப்6 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.9,499ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.7,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.400 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,599 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதைவிட மலிவான விலைக்கு 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.

ஆர்டருக்கு மேல ஆர்டர் விழுது.. ரூ.7,599 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி!

இந்த வேரியண்ட்டின் விலை ரூ.7,499ஆக இருக்கிறது. இந்த விலையிலும் ரூ.375 பேங்க் தள்ளுபடி பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.7,124 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டும் மலிவாக கிடைக்கிறது. இதன் மார்கெட் விலை ரூ.10,999ஆக இருக்கிறது. இப்போது, ரூ.8,999 விலைக்கு கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்6 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F06 5G Specifications): இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) பிஎல்எஸ் எல்சிடி (PLS LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் அதிக 5ஜி பேண்ட்களின் சப்போர்ட் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. இதற்கு ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஒன் யுஐ 7 (One UI 7) சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பெற்று கொள்ளலாம்.

முன்பே சொன்னதை போல இந்த சாம்சங் கேலக்ஸி எப்6 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூகிட்டி அப்டேட்கள் கொடுக்கப்படுகிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கும் 50 எம்பி மெயின் + 2 எம்பி டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.

இந்த கேமராவுக்கு 10X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. ஆனால், ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கவில்லை. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த பட்ஜெட் விலையிலும், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8 மிமீ பாடி கிடைக்கிறது. மொத்தமாக 191 கிராம் எடை கொடுக்கிறது.

சைடு-ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-fingerprint Sensor) மற்றும் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர்களை பெற்று கொள்ளலாம். 12 பேண்ட்களுடன் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்6 5ஜி ஸ்மார்ட்போனை பகாமா ப்ளூ (Bahama Blue) மற்றும் லிட் வயலெட் (Lit Violet) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F06 5G 50MP Camera Available Under Rs 8000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X