பொளக்குது விற்பனை.. ரூ.6000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 1TB மெமரி.. 25W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 50 எம்பி மெயின் கேமரா, 1 டிபி மெமரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, எச்டிபிளஸ் டிஸ்பிளே போன்ற பக்கா பீச்சர்கள் மட்டுமல்லாமல், அடிமட்ட விலையில் பிரீமியம் லுக் கொடுக்கும் வேகன் லெதர் பேனல் டிசைனை கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05) போனுக்கு மிரளவிடும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த விலைக்கு கிடைப்பதால், விற்பனை சூடு பிடித்துள்ளது. இந்த சாம்சங் போனின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.
பட்ஜெட்டில் வேகன் லெதர் பேனல் கொண்ட மாடல் சாம்சங் நிறுவனத்தில் வேண்டுமானால், இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போனை கண்ணை மூடிக்கொண்டு வாங்கி கொள்ளலாம். ஏனென்றால், இந்த பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைப்பது மட்டுமல்லாமல், 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்05 அம்சங்கள் (Samsung Galaxy F05 Specifications): இந்த சாம்சங் போனில் லெதர் பேக் பேனல் (Leather Back Panel) மற்றும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்ட டிசைனில் பிரீமியம் லுக் கிடைக்கிறது. வாட்டர்-டிராப் கேமராவுடன் 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே பேக் செய்யப்பட்டுள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் வருகிறது.
60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அடிமட்ட பட்ஜெட்டில் இருப்பதால், 5ஜி சிப்செட் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் கிடைக்கிறது. முன்பே சொன்னதை போல இந்த பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுத்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் ஒன்யுஐ கோர் 6.0 (OneUI Core 6.0) மற்றும் ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி உள்ளது. இருப்பினும், 1டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் உள்ளது.
இந்த சாம்சங் எப்05 போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) பேக் செய்யப்பட்டுள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப்05 விலை (Samsung Galaxy F05 Price): இந்த சாம்சங் போன் அறிமுகமான போது, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1500 டிஸ்கவுண்ட் போக விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் பெற எந்தவித கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தேவையில்லை.
அதேபோல கூப்பன் டிஸ்கவுண்ட் கூட வேண்டியது இல்லை. நேரடியாக வழங்கப்படுகிறது. ஆகவே, வெறும் ரூ.6,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், இந்த விலைக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங் எப்05 போனில் ட்வைலைட் ப்ளூ (Twilight Blue) கலர் மட்டுமே கிடைக்கிறது. வேகன் லெதர் மாடலுக்கு நல்ல ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








