கடகடவென சரியும் Samsung போன் விலை.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்கள் கொண்ட போன்களை அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
அதாவது அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்05 ஸ்மார்ட்போனுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6,798 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனேவ இந்த போனை ரூ.5,798 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்05 அம்சங்கள் (Samsung Galaxy F05 Specifications): அதேபோல் 6.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்கள், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எப்05 அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஒன்யுஐ கோர் 6.0 (OneUI Core 6.0) மற்றும் ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போன். எனவே இதில் சிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் சாம்சங் கேலக்ஸி எப்05 போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போன் வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எப்05 போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதியுடன் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot), டைப்-சி போர்ட் (Type-C Port) போர்ட், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போனில் உள்ளன.
50எம்பி கேமார, 5000எம்ஏஎச் பேடடரி, பெரிய டிஸ்பிளே மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications