கூவி, கூவி விற்கும் அமேசான்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் இரண்டு Samsung போன்கள். எந்த மாடல்?
அமேசான் கிரேட் சம்மர் சேலில் (Amazon Great Summer Sale) பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிவி, லேப்டாப் டேப்லெட், மொபைல் உள்ளிட்ட பல சாதனங்கள் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு சாம்சங் (Samsung) போன்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இப்போது அந்த இரண்டு சாம்சங் போன்களின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் (amazon) சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்05 (Samsung Galaxy M05) போனுக்கு 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனுக்கு கேஷ்பேக் சலுகையும் கொடுக்கப்படுகிறது. எனவெ இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அதேபோல் அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6,899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.689 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.
சாம்சங் கேலக்ஸி எம்05 அம்சங்கள் (Samsung Galaxy M05 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm)சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்05 போன் வெளிவந்துள்ளது. மேலும் (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் 6.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எம்05 போன் வெளிவந்துள்ளது. மேலும் 720 x 1600 பிக்சல்கள், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஒன் யுஐ கோர் 6.0 (One UI Core 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த சாம்சங் போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 2 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருட செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு, சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-facing Fingerprint Scanner), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி சார்ஜிங் (Type-C Charging), உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்05 போன் வெளிவந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப்05 அம்சங்கள் (Samsung Galaxy F05 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எப்05 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஒன்யுஐ கோர் 6.0 (OneUI Core 6.0) மற்றும் ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன்.
6.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்கள், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் சாம்சங் கேலக்ஸி எப்05 போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்05 போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எப்05 போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதியுடன் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
டைப்-சி போர்ட் (Type-C Port) போர்ட், டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot), சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அமேசான் விற்பனையில் இந்த இரண்டு சாம்சங் போன்கள் தரமான அம்சங்களுடன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications