Home
Mobile

மொத்த ஆர்டரும் இங்கதான்.. மட்ட ரேட் ரூ.5,936-க்கு SAMSUNG போன்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு (Flipkart Big Billion Days Sale) முன்னதாக நடக்கும் எர்லி டீல்களில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. இதில் சாம்சங் கேலக்ஸி எப்5 (Samsung Galaxy F05) மாடலுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. அடிமட்ட ரேட்டில் 5000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. இந்த கேலக்ஸி எப்5 ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.6,249 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த விலையிலும் கூடுதலாக ரூ.313 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.5,936 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

மொத்த ஆர்டரும் இங்கதான்.. மட்ட ரேட் ரூ.5,936-க்கு SAMSUNG போன்!

சாம்சங் கேலக்ஸி எப்5 அம்சங்கள் (Samsung Galaxy F05 Specifications): இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுத்துள்ளது. ஒன்யுஐ கோர் 6.0 (OneUI Core 6.0) கிடைக்கிறது.

சிப்செட்டுக்கு ஏற்ப கிடைக்கும் மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஓஎஸ் அப்டேட் மட்டுமல்லாமல், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கையும் கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்5 ஸ்மார்ட்போனில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. சாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் 16 மில்லியன் கலர் டெப்த் இதிலும் வருகிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எப்5 ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டூயல் ரியர் கேமரா செட்டப்பில் (Dual Rear Camera Setup) 10X ஜூமிங் மட்டுமல்லாமல், ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், ரியர் கேமராவுக்கு ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் எச்டி (HD) ரெசொலூஷனில் ஸ்லோவ் மோஷன் ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதில் எச்டி ரெக்கார்டிங் மட்டுமே கிடைக்கிறது. 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் (MicroSD Slot) கிடைக்கிறது.

3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கிடைக்கிறது. ஸ்லிம் மாடல் கிடையாது. 8.8 எம்எம் தடிமன் வருகிறது. அதேபோல 195 கிராம் எடை கொடுக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கிடைக்கிறது.

மேலும், வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி உள்ளது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் வீகன் லெதர் பேனல் கொண்ட ட்வைலைட் ப்ளூ (Twilight Blue) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. பிரீமியம் லுக்கில் சாம்சங் பிராண்டில் கிடைப்பதால் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F05 4GB RAM Available At Discounted Price on Flipkart Big Billion Days Early Deals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X