Home
Mobile

புதிய Samsung போன் வாங்கனுமா? ஜனவரி 4-ம் தேதிக்கு அப்புறம் வாங்குங்க: ஏனெனில்?

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எப்04 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஜனவரி 4-ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பச்சை மற்றும் ஊதா நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எப்04

கேலக்ஸி எப்04

இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி டிஸ்பிளே டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும்.

ஹீலியோ பி35 சிப்செட்

ஹீலியோ பி35 சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவும் இந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன். அதேபோல் One UI சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

டூயல் ரியர் கேமரா

டூயல் ரியர் கேமரா

புதிய சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் 13எம்பி + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையாகப் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த புதிய போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

3ஜிபி/4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மாரட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியம். பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

 கனெக்டிவிட்டி?

கனெக்டிவிட்டி?

கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இல்லை. ஆனால் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி எப்04 விலை

கேலக்ஸி எப்04 விலை

அதேபோல் 91mobiles தகவலின்படி, இந்த புதிய கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7,499-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் இந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதுதவிர சாம்சங் நிறுவனம் இந்த மாதம் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F04 smartphone will be launched in India on January 4: check Price specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X