Just In
- 8 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 9 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 9 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 10 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
இந்தியாவில் கம்மி விலையில் களமிறங்கும் புதிய Samsung போன்.! எப்போது அறிமுகம் தெரியுமா?
சாம்சங் நிறுவனம் இந்த மாதம் துவக்கத்தில் எம்04 மற்றும் கேலக்ஸி ஏ04 போன்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் கேலக்ஸி எப்04 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் வெளியாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அடுத்த மாதம் துவக்கத்தில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
4ஜிபி ரேம், 4ஜிபி வரை கூடுதல் விர்ச்சுவல் ரேம் ஆதரவு உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி, டூயல் ரியர் கேமரா உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன்.
மேலும் சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7000 அல்லது ரூ.8000 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி இன்பினிட்டி வி நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கு ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்புவசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் போன்.
கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனில் தரமான ஆக்டோ-கோர் Exynos 850 பிராசஸர் வசதி உள்ளது. குறிப்பாக இது மேம்பட்ட வேகத்தை கொடுக்கும். அதேபோல் இந்த பிராசஸர் உதவியுடன் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் சார்ந்த ஒன் யுஐ கோர் 4.1 மூலம் இயங்குகிறது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன்.
4ஜிபி/6ஜிபி /8ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி /64ஜிபி / 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான போன்.
சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரிபேக்கப் கிடைக்கும். பின்பு இந்த போன் பிளாக், வைட், கிரீன் மற்றும் காப்பர் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டூயல் சிம் ஆதரவு, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் என்று கூறப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470