Home
Mobile

கனவு இல்ல நிஜம் தான்.. வெறும் ரூ.6000 பட்ஜெட்ல.. 8GB ரேம்.. 1TB ஸ்டோரேஜ்.. 5000mAh பேட்டரி.. என்ன மாடல்?

8ஜிபி ரேம்., 1டிபி ஸ்டோரேஜ்., 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற முரட்டுத்தனமான அம்சங்களுடன் வரும் ஒரு சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போனின் மீது "மெகா விலைக்குறைப்பு" அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் ஆனது ரூ.6000 பட்ஜெட்டிற்கு இறங்கி வந்துள்ளது. அதென்ன மாடல்? அதன் பழைய மற்றும் புதிய விலை என்ன?

நாம் இங்கே பேசுவது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஃப்04 (Samsung Galaxy F04) ஸ்மார்ட்ப்போனை பற்றித்தான். பெரிய எச்டி+ டிஸ்பிளே மற்றும் மீடியாடெக் ப்ராசஸர், டூயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் ஸ்டைலிஷ் ஆன மற்றும் பளபளப்பான வடிவமைப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.6000 பட்ஜெட்ல.. 8GB ரேம்.. 1TB ஸ்டோரேஜ்.. 5000mAh பேட்டரி!

பழைய விலை மற்றும் புதிய விலை: அறிமுகத்தின் மீது சாம்சங் கேலக்ஸி எஃப்04 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499 ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.2,500 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது. அதாவது இனிமேல் இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அர்த்தம்.

விலைக்குறைப்பு மட்டுமல்ல சாம்சங் கேலக்ஸி எஃப்04 ஸ்மார்ட்போன் மீது வேறு சில சலுகைகளும் கிடைக்கிறது. சாம்சங் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10% கேஷ்பேக் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் மொபிவிக் வேலட்டை பயன்படுத்தினால் உங்களுக்கு 15% கேஷ்பேக் கிடைக்கும்.

அதாவது சாம்சங் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்ட்டில் (Samsung Axis bank credit card) ரூ.699 தள்ளுபடியும், மொபிவிக் வேலட்டின் (Mobikwik wallet) கீழ் ரூ.1049 தள்ளுபடியும் கிடைக்கும். இப்படியாக ஏற்கனவே விலை குறைந்துள்ள சாம்சங் கேலக்ஸி எஃப்04 ஸ்மார்ட்போனின் விலையை உங்களால் ரூ.6000 பட்ஜெட்டிற்கு கொண்டு வர முடியும்.

சாம்சங் கேலக்ஸி எஃப்04 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? இந்த கேள்விக்கான பதிலை ஒரே வரியில் அல்லது மேலோட்டமாக கூறிவிட முடியாது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேரு வகையான தேவைகள் இருக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் நிறைகள் மற்றும் குறைகளை இங்கே பட்டியலிடுகிறோம். இதன் மூலம், இது உங்களுக்கு பொருத்தமான போனாக இருக்குமா என்கிற முடிவை நீங்களே எடுத்துக்கொள்ளலாம்:

நிறைகளை பற்றி பேசும் போது, இது நீண்ட கால பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. கூடவே 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்பீடையும் வழங்குகிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட இது பிரத்யேக மைக்ரோஎஸ்டிஎக்ஸ்சி கார்டு ஸ்லாட் உடன் வருகிறது. அதுமட்டுமின்றி இதன் மெயின் ரியர் கேமராவனது பகல் நேரங்களில் நல்ல தரத்திலான புகைப்படங்களையும் வழங்குகிறது.

குறைகளை பற்றி பேசும் போது, இது டீபால்ட் ஆன நிட்ஸ் ப்ரைட்னஸையே (அதாவது ரெஃப்ரெஷ் ரேட்டை) வழங்குகிறது. மேலும் இதில் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் இல்லை. ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இல்லாமல் வரும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள இன்னொரு குறை, இது கேமிங் செய்வதற்கு உகந்த போனாக இல்லை என்பதே ஆகும்.

இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? சாம்சங் கேலக்ஸி எஃப்04 ஸ்மார்ட்போன் ஆனது 720x1560 பிக்சல் ரெசல்யூஷன் உடனான 6.5-இன்ச் எச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் மற்றும் 4ஜிபி ரேம் + 4ஜிபி விர்ச்சுவல் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 64ஜிபி உடன் வருகிறது. மேலும் இதில் மைக்ரோஎஸ்டி கார்டிற்கான ஆதரவும் உள்ளது; இதன் மூலம் 1டிபி வரை விரிவாக்க முடியும். டூயல் சிம் கார்டுகளுக்கு இடமளிக்கும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமராஸ் செட்டப் உள்ளது.

அதில் 2எம்பி டெப்த் சென்சார் உடனான 13எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 5எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை ஜேட் பர்பில் மற்றும் ஓபல் கிரீன் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F04 gets Rs 2500 Price Cut Available For Rs 6999 Check Pros Cons Before Buying
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X