Home
Mobile

மலிவு விலையில் அறிமுகமும் புதிய சாம்சங் கேலக்ஸி எப்02எஸ்.. விலை இது தான்..

சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் நம்ப முடியாத விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இது பற்றிய முழு தகவலை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மலிவு விலையில் அறிமுகமும் புதிய சாம்சங் கேலக்ஸி எப்02எஸ்..

சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் முந்தைய சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட புதிய வெர்ஷனாகும். முன்னதாக வெளியான தகவலின் படி, சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன், 6.5' இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வருகிறது. இது கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர் உடன் இயங்குகிறது. புதிய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் உடன் வருகிறது.

புதிய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமரா பற்றி பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் சிம் 4ஜி, சிங்கில் பேன்ட் வைபை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விலை விவரங்களை பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் மாடலின் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை ரூ. 8,999 ஆகும். அதேபோல், இதன் சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 9,999 ஆகும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F02s Leaked Price and Specification Information : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X