Home
Mobile

விரைவில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி எஃப் 6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.23,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. தென்கொரிய ஸ்மார்ட்போன் பிராண்ட் கேலக்ஸி எஃப்02 எஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. எஃப் தொடரின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து முழு விவரங்கள் உறுதிப்படுத்தவில்லை இருப்பினும் விலை மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ்: அம்சங்கள் இதுவா?

டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் சமீபத்திய தகவலின்படி, இந்த அடிப்படை மாடல் ஆன கேலக்ஸி எஃப்02 எஸ் இந்தியாவில் ரூ.8,999 முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. அது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு கொண்ட டாப் எண்ட் மாடலாகும் இதன் விலை ரூ.9,999 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி அடுத்தவாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது, அதேபோல் 5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ அடுத்தவாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. நிறுவனம் எஸ்20 எஃப்இ 5ஜி இந்தியாவில் மார்ச் 30 முதல் விற்பனைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் உடன் கூடிய ஸ்மார்ட்போனை நாட்டிற்கு கொண்டு வருவதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எகனாமிக் டைம்ஸின் அறிக்கையின்படி, சாம்சங் எஸ் 20 எஃப்இ 5ஜி இந்தியாவில் ரூ.50,000-க்கு குறைவாக கிடைக்கும் எனவும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 4ஜி பதிப்பு ரூ.49,999 ஆக அறிமுகம் செய்யப்பட்டது.

விரைவில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ்: அம்சங்கள் இதுவா?

சாம்சங் கேலக்ஸி எஃப் தொடரில் வரும் கேலக்ஸி எஃப் 02 ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உடன் வருகிறது. முன்பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வரும் என கூறப்படுகிறது.8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி S20 FE 4G ஸ்மார்ட்போனை ரூ.49,999-விலையில் வாங்க முடியும். இனி வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் தோற்றம் சமீபத்திய சாம்சங் கேலக்ஸி Note 20 மாடலை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மிண்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் ஒயிட் போன்ற பல்வேறு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ்: அம்சங்கள் இதுவா?

சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஃப் 02 சில விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 6.5 இன்ச் 720 பிக்சல் டிஸ்ப்ளே இருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி சிப்செட் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F02s Launching Soon in India: Expected Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X