சாம்சங் கேலக்ஸி எப்02எஸ், கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! ஆரம்ப விலை ரூ.8,999 மட்டுமே.!
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எப்02எஸ், கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் நான்கு ரியர் கேமரா, 90Hz டிஸ்பிளே என பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்12 விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. மேலும்4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எப்12 மாடலின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. Sea Green, Sky Blue
மற்றும் Celestial Black போன்ற நிறங்களில் இந்த கேலக்ஸி எப்12 மாடல் கிடைக்கும். பிளிப்கார்ட் உள்ளிட்ட பல்வேறுதளங்களில் வரும் ஏபரல் 12-ம் தேதி முதல் இந்த விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்12 அம்சங்கள்
- டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்கள்)
- 20:9 என்ற திரைவிகிதம்
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- சிப்செட்: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் ஆதரவுடன் எஸ்நோஸ் 850 ஆதரவு உள்ளது.
- ரேம்: 4ஜிபி
- மெமரி: 64ஜிபி/128ஜிபி
- கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
- ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
- செல்பீ கேமரா: 8எம்பி
- பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
- இரட்டை சிம், புளூடூத் 5.0, வைஃபை,
- ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- எடை: 221 கிராம்
- டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளே (1560 x 720 பிக்சல்கள்)
- சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடன் அட்ரினோ 506 ஜிபியு ஆதரவு
- ரேம்: 3ஜிபி/4ஜிபி
- மெமரி: 32ஜிபி/64ஜிபி
- கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
- ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார்
- செல்பீ கேமரா: 5எம்பி
- பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
- 15 வாட் குவிக் சார்ஜ் ஆதரவு
- OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
- இரட்டை சிம், புளூடூத் 5.0, வைஃபை,
- ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்

சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் விலை
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எப்02எஸ் மாடலின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. மேலும் டயமண்ட் ப்ளூ, டயமண்ட் ஒயிட் மற்றும் டயமண்ட் பிளாக் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம். பிளிப்கார்ட் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி விற்பனைக்கு வருகிறது கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன்.



Click it and Unblock the Notifications