ரூ. 8,999 விலையில் Samsung Galaxy F02s இன்று விற்பனை.. மலிவு விலையில் தரமான போன் வாங்க உடனே முந்துங்கள்..

|

சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் (Samsung Galaxy F02s) ஸ்மார்ட்போன் கடந்த வாரம் சாம்சங் கேலக்ஸி எஃப் 12 உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் ஸ்மார்ட்போன் இன்று முதல் நாட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் ஸ்மார்ட்போன் இன்று தனது முதல் விற்பனையை பிளிப்கார்ட் , சாம்சங்.காம் மற்றும் ஆஃப்லைன் மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகள் வழியாக விற்பனைக்குக் கிடைக்கும். இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சம் போன்ற முழு விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

புதிய சாம்சங் கேலக்ஸி F02s

புதிய சாம்சங் கேலக்ஸி F02s

புதிய சாம்சங் கேலக்ஸி F02s ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் மாடல் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. அதேபோல், சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாகவும் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் விலை

சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் விலை

சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் மாடலான 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் வெறும் ரூ. 8,999 விலையில் கிடைக்கிறது. இதன் ஹை-எண்ட் வேரியண்ட் மாடலான 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 9999 விலையில் கிடைக்கிறது. இது டயமண்ட் ப்ளூ, டயமண்ட் ஒயிட் மற்றும் டயமண்ட் பிளாக் வண்ணங்களில் வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் எப்படி அது வந்துச்சு.,அதுக்கு வாய்ப்பே இல்ல-பெரும் விவாதத்திற்கு நாசா வைத்த முற்றுப்புள்ளிசெவ்வாய் கிரகத்தில் எப்படி அது வந்துச்சு.,அதுக்கு வாய்ப்பே இல்ல-பெரும் விவாதத்திற்கு நாசா வைத்த முற்றுப்புள்ளி

சாம்சங் கேலக்ஸி F02s சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி F02s சிறப்பம்சம்

புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் ஸ்மார்ட்போன், 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஎஃப்டி கொண்ட 1560 x 720 பிக்சல்கள் தீர்மானம் உடைய வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடன் அட்ரினோ 506 ஜி.பீ. உடன் செயல்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1TB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பிற்கான மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா விபரம்

கேமரா விபரம்

புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் ஸ்மார்ட்போனின் கேமராவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 13 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி சென்சார், 2 மெகா பிக்சல்கள் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகா பிக்சல்கள் கொண்ட டெப்த் சென்சாரை கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன் பக்கத்தில், 5 மெகா பிக்சல் கொண்ட சென்சார் செல்ஃபிக்களுக்காகவும், வீடியோ அழைப்பிற்காகவும் வாட்டர் ட்ராப் நாட்ச் உடன் டிஸ்பிளேயில் வைக்கப்பட்டுள்ளது.

தரமான புதிய ஸ்மார்ட்போன்

தரமான புதிய ஸ்மார்ட்போன்

புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் ஸ்மார்ட்போனின் மென்பொருள் முன்னணியில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஒன் யுஐ 2.5 இயங்குதளத்தில் இயக்குகின்றது. இது 15W பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இத்துடன் இதில் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை போன்ற பிற அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. மலிவான விலையில் ஒரு தரமான புதிய ஸ்மார்ட்போன் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இந்த சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் ஸ்மார்ட்போனை மிஸ் செய்திட வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F02s first sale starts today via Flipkart Samsung com and retail stores offline : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X