Home
Mobile

அடுத்த Samsung 5ஜி போன் ரெடி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எப் சீரிஸ் (Galaxy F-serie)ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது பிளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய எப் சீரிஸ் குறித்த விளம்பரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது சமீபத்தில் தான் BIS சான்றிதழ் தளத்தில் SM-E166 என்ற மாடல் நம்பர் உடன் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் காணப்பட்டது. எனவே விரைவில் இந்த கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி எப்16 போனின் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அடுத்த Samsung 5ஜி போன் ரெடி.. 50எம்பி கேமரா..எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F16 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

மேலும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எப்16 5ஜி போன் வெளிவரும். மேலும் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த கேலக்ஸி எப்16 5ஜி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது கேலக்ஸி எப்16 5ஜி போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது கூடிய விரைவில் இதன் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்25 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அம்சங்கள் (Samsung Galaxy S25 Specifications): ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட்(Qualcomm Snapdragon 8 Elite chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

அதேபோல் 6.2-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் QHD+ இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் 2எக்ஸ் டிஸ்பிளே (Infinity-O Dynamic AMOLED 2X Display) வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3120 x 1440 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது

குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் 4கே மற்றும் 8கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும். அதேபோல் One UI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.

அடுத்த Samsung 5ஜி போன் ரெடி.. 50எம்பி கேமரா..எந்த மாடல்?

5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல்-பேண்ட் வைஃபை 7 802.11பிஇ, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 போனில் உள்ளன. இதுதவிர மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்25 போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F Series Phone Teaser Released Officially In India: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X