விரைவில் இந்தியாவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி E02.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக பட்ஜெட் விலை சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.

கேலக்ஸி இ02
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி இ02 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் மாடல் எண் SM-E025F/DS என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி e02 ஸ்மாரட்போனின் அம்சங்களைவிரிவாகப் பார்ப்போம்.

1080 பிக்சல் தீர்மானம்
சாம்சங் கேலக்ஸி இ02 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு
சாம்சங் கேலக்ஸி இ02 கேமரா, பிராசஸர்,பேட்டரி உள்ளட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன்புஅறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி ஏ32 4ஜி
கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது, மேலும கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி
கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ32 டிஸ்பிளே
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், வெள்ளை, வயலட், போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் சூப்பர் AMOLED Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90Hz refresh rate, 800nits பிரைட்நஸ் வசதி, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி ஏ32 4ஜி கேமராக்கள்
கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி
சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 ஆதரவு உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் எடை 184 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ32 4ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ32 4ஜி மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.19,990-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ32 4ஜி மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.21,535-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications