சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது
சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம் ரூ.9275 விலைக்கு இணைய வர்த்தகங்களில் விற்பனைக்கு வந்தது. சாம்சங் புதிய ஸ்மார்ட்போனின் சந்தை விலை ரூ.9700 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.
[டிசம்பர் டாப் 10 ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன் பட்டியல்]
சாம்சங் நிறுவனத்தில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களின் புது வரவு தான் சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம். அநைவரையும் கவரும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதோடு ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்குவதோடு சாம்சங் TouchWiz UI கொண்டுள்ளது.

மேலும் சாம்சங்கின் அல்ட்ரா பவர் சேவிங் மோட் ஆப்ஷனும் இதில் உள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை போன்று தான் காட்சியளிக்கின்றது.
டிஸ்ப்ளேவை பொருத்த வரை 4.5 இன்ச் WVGA PLS டச்ஸ்கிரீன், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் கொண்டுள்ளதோடு 5 எம்பி ப்ரைமர் கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 1 ஜிபி ராம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
[ஐஓஎஸ் 8 இல் வாட்ஸ் ஆப் க்ராஷ் ஆனால் என்ன செய்யனும்]
இதோடு வைபை, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ் கனெக்ஷன் இருப்பதோடு 2000 எஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
சாம்சங் கேலக்ஸி கோர் இந்தியாவில் இன்னும் ஸ்டாக் இல்லை என்றாலும் ஈபே, மற்றும் அமேசான் தளத்தில் ரூ.10,150க்கு வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications