6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி டி9 ப்ரோ, ஆர்டர் செய்யனுமா.?
சாம்சங் கேலக்ஸி டி9 ப்ரோ கருவியை வாங்க விரும்பும் நுகர்வோர்கள் முன்பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன.
இப்போது சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் முன்பதிவுகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இக்கருவியை வாங்க விரும்பும் நுகர்வோர்கள் முன்பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன.
ஒன்று நீங்கள் நேரடியாக சாம்சங் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ ஆன்லைன் ஸ்டோர் செல்வதின் மூலம் கேலக்ஸி சி9 ப்ரோ கருவியை முன்பதிவு செய்ய முடியும் மற்றும் ஆப்லைன் மூலமாக அதாவது ஸ்மார்ட் கஃபேக்கள் மூலமும் நீங்கள் இக்கருவியை முன்பதிவு செய்யமுடியும். இக்கருவியின் இந்திய துவக்க விழாவில் சாம்சங் நிறுவனமானது இந்த ஸ்மார்ட்போன் அனைத்து முன்னணி மொபைல் கடைகளின் வழியாகவும் கிடைக்கும் என்று உறுதி அளித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சலுகை
இந்த சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ முன்பதிவில் வருகிற 12-ஆம் தேதி வரையிலாக வாடிக்கையாளர்க்ளுக்கு சில பிரத்தியேகமான சலுகைகளையும் சாம்சங் வழங்கும். அதாவது முன்பதிவுகளுக்கு 12 மாத காலத்திற்கு ஒரு முறை ஸ்க்ரீன் மாற்று வழங்கும். உடன் இந்த தென் கொரிய நிறுவனம் எச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ வாய்ப்பையும் வழங்குகிறது.

4ஜி, ஆண்ட்ராய்டு
இரட்டை சிம் (நானோ + நானோ) கொண்ட 4ஜி ஆதரவு செயல்படுத்தப்பட்ட இந்த சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ கருவியானது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கும்.

டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன்
ஒரு 6 அங்குல முழு எச்டி (1080x1920) அமோஎல்ஈடி டிஸ்ப்ளே கொண்ட இக்கருவி போர் கோர் கொண்ட 1.95ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.4ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட ஒரு ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 653 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா
கேமரா துறையை பொறுத்தமட்டில் கேலக்ஸி சி9 ப்ரோ முன் மற்றும் பின்பக்கம் இரண்டிலும் ஒரு 16 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. பின்புற 16-மெகாபிக்சல் கேமராவானது எப் /1.9 துளை மற்றும் ஒரு இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்டு வருகிறது. செல்பீ கேமராவானது அதே துளை மற்றும் பிளாஷ் தொகுதி கொண்டுள்ளது.

சேமிப்பு, கைரேகை ஸ்கேனர்
மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256ஜிபி வரை நீட்டிக்கும் வசதி கொண்ட 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு கொண்ட இக்கருவியின் ஹோம் பொத்தானில் ஏற்றப்பட்ட ஒரு கைரேகை ஸ்கேனர் உள்ளது.

பேட்டரி, இணைப்பு வசதி
பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட 4000எம்ஏஎச் பேட்டரி கொண்ட இக்கருவி 4ஜி, எல்டிஇ, ப்ளூடூத் வி4.2, வைஃபை, ஜிபிஎஸ், கிளோநாஸ், பெய்டோ, என்எப்சி, யுஎஸ்பி டைப் சி மற்றும் ஒரு 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகிய இணைப்பு வசதிகளை வழங்குகிறது.

விலை
அளவீடுகளில் 162.9x80.7x6.9மிமீ மற்றும் 189 கிராம் எடையுடை இக்கருவி சீனாவில் கடந்த அக்டோபர் தொடங்கப்பட்டு, கடந்த மாதம் ரூ.36,900 என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கேலக்ஸி சி9 ப்ரோ கருவி தான் நிறுவனத்தின் முதல் 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் ஆகும்.

மேலும் படிக்க
மோட்டோ ஜி5 ப்ளஸ் : விலை, அம்சங்கள் & வெளியீட்டு தேதி.!


Click it and Unblock the Notifications