சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.!
சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.31,900-ஆக இருந்தது, இப்போது ரூ.2000-வரை விலை குறைக்கப்பட்டு ரூ.29,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.31,900-ஆக இருந்தது, இப்போது ரூ.2000-வரை விலை குறைக்கப்பட்டு ரூ.29,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடலில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் டூயல்-சிம் ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:
சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ பொதுவாக 6-இன்ச் முழு எச்டி அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல்தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றள்ளது.

ஆக்டோ-கோர்:
இக்கருவி பொதுவாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 653எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஹோம் பட்டன்:
இந்த சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 256ஜிபி மெமி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது. மேலும் கைரேகை ஸ்கேனர், ஹோம் பட்டன் போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ பொதுவாக 16எம்பி ரியர் கேமரா மற்றும் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது, அதன்பின் டூயல்
எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, ஜிபிஎஸ் மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:
சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications