சீன வலைத்தளத்தில் சிக்கிய சாம்சங் கேலக்ஸி சி8.!
"எஸ்எம்-சி7100" என்ற குறியீட்டு பெயரில் அறியப்படும் இக்கருவி கேலக்ஸி சி8-ஆக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.
சமீபத்தில் சாம்சங் நிறுவனம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் கேலக்ஸி நோட் சாதனத்தை வெளியிட்ட பின்னர் அடுத்தடுத்த தாயாரிப்புகளில் மிகவும் பிஸியாக உள்ளது. அப்படியாக சாம்சங் நிறுவனத்திடம் இருந்து என்ன ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம் என்பதை சீன வலைத்தளம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
வெளியான தகவலில் இருந்து தென் கொரிய நிறுவனமான சாம்சங் ஆனது அதன் கேலக்ஸி சி8 ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுவருவது தெரிய வந்துள்ளது. "எஸ்எம்-சி7100" என்ற குறியீட்டு பெயரில் அறியப்படும் இக்கருவி கேலக்ஸி சி8-ஆக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.

மலிவு விலை
இந்த ஸ்மார்ட்போன் ஒரு இடைப்பட்ட பட்ஜெட் பிரிவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் அதன் மலிவு விலையானது அதன் உயர் இறுதி அம்சங்களோடு சமரசம் செய்து கொள்ளாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரோமோ மெட்டீரியல்
வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் ப்ரோமோ மெட்டீரியல் ஒன்று தற்செயலாக ஒரு சீன வலைத்தளம் ஒன்றில் வெளியானது. எனினும், அந்த புகைப்படத்தை வலைத்தளத்தில் இருந்து எடுக்க நீண்ட நேரம் ஆனதால் அது பெரும்பாலான மக்களால் கண்டுக்கொள்ளப்பட்டது.

இரட்டை கேமரா
சுவாரசியம் என்னவென்றால் கசிந்த புகைப்படமானது ஸ்மார்ட்போனின் பெயர் கேலக்ஸி சி8 என்பதை உறுதிசெய்கிறது மற்றும் அது இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டு வெளியாகும் என்பதையும் காட்சிப்படுத்தியது.

சிறப்பாக இருப்பதாய் தெரியவில்லை
இருப்பினும் இதன் இரட்டை கேமரா அமைப்பானது, இந்த 2017-ஆம் ஆண்டில் வெளிவந்த எந்தவொரு பிரீமியம் ஸ்மார்ட்போனின் இரண்டு பின்புற லென்ஸ்களை விட சிறப்பாக இருப்பதாய் தெரியவில்லை

சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே
வெளியான பல அறிக்கைகளின் கீழ் கேலக்ஸி சி8 ஆனது ஒரு முழு எச்டி பிக்சல் தீர்மானம் (1080 x 1920) கொண்ட ஒரு 5.5 அங்குல சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டிருக்கலாம்.

ரேம்
சாம்சங் கேலக்ஸி சி8 ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயங்கும் உடன் 3 ஜிபி அல்லது 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அல்லது 64 ஜிபி விரிவாக்கக்கூடிய உள் சேமிப்பு இடத்தையும் கொண்டிருக்கும்.

பேட்டரி
கேலக்ஸி சி8 ஒரு சிறிய 2,850எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்த அளவிலான பேட்டரி மிகவும் சிறியது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் மிகவும் மெலிதானதொரு வடிவமைப்பை பெரும் என்றும் எதிர்பார்க்கலாம்.

ஒரு சிக்கல் அல்ல
இந்த லீக்ஸ் மூலம் சாம்சங் நிறுவனம் ஊடகங்களின் கண்களில் சிக்காத ஒரு ஸ்மார்ட்போன் சார்ந்த பணியில் ஈடுபடுவது வெளிப்படை. எவ்வாறாயினும், ஸ்மார்ட்போன் தொழிலில் ரகசியத்தை வைத்திருக்க வேண்டியது முக்கியம் இல்லை என்பதால், இது ஒரு சிக்கல் அல்ல.


Click it and Unblock the Notifications