3 கேமிராக்கள், பேஷியல் ரிகக்னைசேஷன் உடன் சாம்சங் கேலக்ஸி சி8.!
சாம்சங் கேலக்ஸி சி8 கொண்டுள்ள அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான விவரங்கள் இதோ.
சாம்சங் நிறுவனம் சீனாவில் அதன் சாம்சங் கேலக்ஸி சி8 ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. வெளியான அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. பின்பக்கம் உள்ள இரட்டை கேமரா அமைப்பில் 13 எம்பி மற்றும் 5 எம்பி சென்சார்கள் முறையே எப் / 1.7 மற்றும் எப் / 1.9 துளையுடன் உள்ளன. மூன்றாவது கேமராவண முன்பக்க கேமரா எப் / 1.9 துளை கொண்ட 16 எம்பி சென்சாராக உள்ளது.

இதன் இரட்டை கேமரா உணரிகள் ஒரு புகைப்படம் எடுத்த பின்னர், அதில் போகஸ் மாற்றங்களை நிகழ்த்த பயனர்களை அனுமதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கருவி கொண்டுள்ள அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான விவரங்கள் இதோ.

இரண்டு மாறுபாடு
கேலக்ஸி சி8 ஆனது 1920x1080 பிக்சல் தீர்மானம் கொண்ட 5.5 அங்குல சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் இரண்டு மாறுபாடுகளில் வெளியாகியுள்ளது - 3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி உள் சேமிப்பு.

மூன்று நிற வகை
ஒரு 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் மற்றும் பேஷியல் ரிகக்னைசேஷன் ஆகிய இரண்டும் அடையாள அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த கேலக்ஸி சி8 ஆனது மூன்று நிற வகைகளில் - பிளாக், தங்கம் மற்றும் ரோஸ் கோல்ட் - விற்பனைக்கு கிடைக்கும்.

விலை மற்றும் கிடைக்கும்தன்மை
மேலும் சாம்சங் கேலக்ஸி சி8 ஆனது, சாம்சங் நிறுவனத்தின் ஆல்வேஸ்பி-ஆன் டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது. இந்த அம்சம் தொலைபேசியைத் ஆன் செய்யாமலேயே நோட்டிபிகேஷன்களை சரிபார்க்க அனுமதிக்கும். இந்த தொலைபேசியின் விலை மற்றும் கிடைக்கும்தன்மை சார்ந்த விவரங்களை நிறுவனம் உறுதி செய்யவில்லை.

6.3 அங்குல பெஸல்லெஸ் வடிவமைப்பு
சமீபத்தில் சாம்சங் நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. 6.3 அங்குல பெஸல்லெஸ் வடிவமைப்பு கொண்ட ஓஎச்டி பிளஸ், சூப்பர் அமோ எல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ள அக்கருவி க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 கொண்டு இயங்குகிறது.

இரண்டு 12எம்பி சென்சார்கள்
6 ஜிபி ரேம் கொண்டுள்ள கேலக்ஸி நோட் 8 ஆனது வருகிற செப்டம்பர் 15 முதல் மூன்று சேமிப்பு மாதிரிகளில் (64/128/256 ஜிபி) கிடைக்கும். இந்த சாதனம் கேமரா அம்சத்தை பொறுத்தமட்டில், பின்புறத்தில் எப் / 1.7 மற்றும் எப் / 1.9 துளைகள் கொண்ட இரண்டு 12எம்பி சென்சார்கள் கொண்டுள்ளது மறுபக்கம் எப்/1.7 துளையுடனான 8எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கும்.

சுமார் ரூ.59,000/-
ஒரு 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 கொண்டு இயங்குகிறது. சுமார் 930 டாலர்கள் (சுமார் ரூ.59,000) தொடங்கி 960 டாலர்கள் (சுமார் ரூ. 61,000) என்ற விலை நிர்ணய புள்ளிக்குள் இக்கருவியை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications