விரைவில் : 6ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி சி10 பிளஸ்.!
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அட்டகாசமான விலைகுறைப்பை அறிவித்தப்பின்பு, தற்சமயம் அந்த நிறுவனத்தின் புதிய கேலக்ஸி சி10 பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பல மென்பொருள் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் ( 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு) கொண்ட ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் ( 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு) கொண்ட ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் கேலக்ஸி சி10 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

திரைவிகிதம்:
கேலக்ஸி சி10 பிளஸ் ஸ்மார்ட்போனில் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 1080 x 1920 பிக்சல் திர்மானம்
மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண்
தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி எஸ்எம்-சி9150-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660:
இந்த கேலக்ஸி சி10 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


3000எம்ஏஎச்:
கேலக்ஸி சி10 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை:
இந்த சாதனத்தின் விலைப் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை, மேலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications