Samsung வச்ச ட்ரீட்.. கூடுதல் சாம்சங் போன்களில் Galaxy AI அம்சம்.. இந்த போன் உங்ககிட்ட இருக்கா?
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி AI அம்சத்தை இப்போது கூடுதல் சாதனங்களில் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. சாம்சங் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள புதிய One UI 6.1 அப்டேட் மூலம் Galaxy AI அம்சம் இன்னும் கூடுதல் சாதனங்களுக்கு கிடைத்துள்ளது.
சாம்சங் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் மாடலான Samsung Galaxy S24 தொடர் மூலம், கேலக்ஸி ஏஐ (Galaxy AI) அம்சத்தை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் AI அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன் பட்டியலில் சாம்சங் தனது பெயரை நிலைநாட்டியது. இப்போது நிறுவனம் அந்த பட்டியலில் கூடுதல் சாதனங்களை சேர்க்க முடிவு செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி AI அம்சம் கிடைக்கும் புது போன்கள்:
இதன் படி, சமீபத்திய One UI 6.1 அப்டேட் உடன், இன்னும் பல சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு அதிகாரப்பூர்வமாக கேலக்ஸி AI அம்சம் கிடைக்கப்போகிறது. சாம்சங் Galaxy AI ஆனது, 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான சாதனங்களில் அணுக கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக நிறுவனம் இப்போது சில சத்தங்களுக்கு AI அம்சத்தை வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள One UI 6.1 அப்டேட் மூலம் Galaxy AI இப்போது பல சாதனங்களுக்கு கிடைத்துள்ளது. இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் உள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு இது கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த அப்டேட் இந்தியாவிற்கு எப்போது வெளிவரும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், இது விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி AI அம்சத்தை பெரும் புதிய சாதனங்களின் பட்டியல்
1. சாம்சங் கேலக்ஸி S23 (Samsung Galaxy S23)
2. சாம்சங் கேலக்ஸி S23+ (Galaxy S23+)
3. சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா (Galaxy S23 Ultra)

5. சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 5 (Galaxy Z Fold 5)
6. சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் 5 (Galaxy Z Flip 5)
7. சாம்சங் கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா (Galaxy Tab S9 Ultra)
8. சாம்சங் கேலக்ஸி டேப் S9+ (Galaxy Tab S9+)
9. சாம்சங் கேலக்ஸி டேப் S9 வைஃபை (Galaxy Tab S9 Wi-Fi)
அதிகாரப்பூர்வ சாம்சங் நியூஸ்ரூம் அறிவிப்பின்படி, மேலே உள்ள பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்கள் மார்ச் 28 முதல் சமீபத்திய One UI அப்டேட் மூலம் Galaxy UI அம்சங்களைப் பெறத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், Samsung Galaxy Tab S9 தொடர் இந்த வாரம் புதுப்பிப்பைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், சரியான தேதியை பிராண்ட் குறிப்பிடவில்லை.
சர்க்கிள் டு சர்ச் (Circle-to-search): பயனர்கள் நேவிகேஷன் பாரை நீண்ட நேரம் அழுத்தி, அம்சத்தை மேலே இழுத்து, அவர்கள் தகவலைப் பெற விரும்பும் பொருளை டிஸ்பிளேவில் வட்டமிட்டால் போதும், அது தொடர்பான தகவல் வழங்கப்படும்.
லைவ் டிரான்ஸ்லேட் (Live Translate): இந்த அம்சம் நிகழ்நேரத்தில் பல மொழிகளை மொழிபெயர்ப்பு செய்கிறது.
நோட் அஸ்சிஸ்ட் (Note Assist): இந்த அம்சம் நோட்ஸ் பயன்பாட்டில் தானாக வடிவமைத்தல், சுருக்கம், எழுத்துப்பிழை திருத்தம், மொழிபெயர்ப்பு மற்றும் கவர் உருவாக்கம் ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
போட்டோ அஸ்சிஸ்ட் (Photo Assist): Samsung Galaxy பயனர்கள் புகைப்படங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றலாம், புகைப்படங்களை ரீமாஸ்டர் செய்யலாம், போர்ட்ரெய்ட் எஃபெக்ட்களைச் சேர்க்கலாம் மற்றும் பலவற்றை நேரடியாக கேலரி பயன்பாட்டிலிருந்து செய்யலாம். இந்த அம்சங்களை இப்போது பயனர்கள் AI அம்சத்தின் பெறுவார்கள்.


Click it and Unblock the Notifications








