6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில குறிப்புகள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போனின் மாடல் எண் எஸ்எம்-ஏ915எப் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்பு சற்றுவித்தயசமாக இருக்கும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிடி-யு டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி இடம்பெறும் என்றும் பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா+ 5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.
இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன் வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ91 சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது,பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications