விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.!
சாம்சங்; நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சுழலும் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இப்போது ஆன்லைனில் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளது, அதைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.41-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 1080 பிக்சல் திர்மானம்,19:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

கேலக்ஸி ஏ90 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. மேலும் இந்த சாதனத்தில் பின்புறத்தில் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இதனுள் அடக்கம். அதேபோல் டூயல் ரியர் கேமரா மற்றும் ஏஐ சார்ந்த செல்பீ கேமரா இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications