DeX உடன் களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போன்! விலை & முழு விபரம்!

|

சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போன் ஒருவழியா அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. சாம்சங் நிறுவனத்தின் A சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்டியலில் வெளியாகும் முதல் 5ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

டெக்ஸ் (DeX) ஆதரவுடன் களமிறங்கும் முதல் சாம்சங் போன்

முதல் முறையாக டெக்ஸ் (DeX) ஆதரவுடன், சாம்சங் நிறுவனம் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போன் மடலை அறிமுகம் செய்துள்ளது. டெக்ஸ் சேவையைக் கொண்டு பயனர்கள் தங்களின் மொபைலை கணினி மற்றும் டிவியுடன் இணைத்து பெரிய திரைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அட்டகாசமான புதிய ஹாஃப் கிரேடியன்ட் டிசைனில்

புதிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போன், அட்டகாசமான புதிய பாதி கிரேடியன்ட் டிசைனில் பிளாக் மற்றும் வைட் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் மேல் பாதி கிரேடியன்ட் டிசைனிலும் மற்ற பாதி இயல்பான டிசைனிலும் சிறப்பாக வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. வைட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள டிசைன், பிளாக் நிறத்தில் தலைகீழாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடுப்பில் அம்பானி: ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மற்றும் ஸ்டிக் அறிமுகம்.! விலை?

ஸ்டோரேஜ் வேரியண்ட் & விலை விபரம்

புதிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போன், 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய புதிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,100 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி பதிப்பில் வெளியாகும் என்பது சந்தேகம் தான்.

ஆர்பிஐ அனுமதியுடன் களமிறங்கும் புதிய வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவை! முழுவிபரம்.!

சாம்சங் கேலக்ஸி A90 5ஜி சிறப்பம்சங்கள்
  • 6.7' இன்ச் கொண்ட 1080x2400 பிக்சல் உடைய முழு எச்.டி பிளஸ் சூப்பர் அமோலேட் வாட்டர் ட்ராப் டிஸ்பிளே
  • குவால்காம் ஸ்னாப் டிராகன் 855 பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 9.0 பை
  • 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • 512 ஜிபி வரை எஸ்.டி கார்டு சேவை

பாக்.க்கு சூரசம்ஹாரம் தான்:8 அப்பாச்சி ஹெலிகாப்படரை களமிறங்கிய இந்தியா.!

கேமரா விபரங்கள்
  • 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
  • 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா
  • 5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா
  • 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
  • இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
  • 25W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 4500 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ. 53,100 (எதிர்பார்க்கப்படுகிறது)

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A90 5G Smartphone with DeX! Price & Full Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X