Home
Mobile

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயக்க அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ.!

சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ முதலில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயக்கத்தளத்துடன் தொடங்கப்பட்டது. இப்போது இயக்கருவி ரூ.28,999/- என்ற விலைக்கு ப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

By Muthuraj

சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.32,490/- என்ற விலை நிர்ணயத்தில் தொடங்கப்பட்டது. இப்போது இக்கருவி கிஎப்எக்ஸ்பென்ச் (GFXBench) தரப்படுத்துதல் இணையதளத்தில் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயக்க அமைப்புடன் காணப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயக்க அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ.!

இது வெறுமனே சாம்சங் நிறுவனம் சமீபத்திய மென்பொருளை பரிசோதிப்பதாகக் இதை நிகழ்த்துகிறது என்றும், விரைவில் இந்த சாதனத்தை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ முதலில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயக்கத்தளத்துடன் தொடங்கப்பட்டது என்பதும் இப்போது இயக்கருவி ரூ.28,999/- என்ற விலைக்கு ப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்சங்களை பொறுத்தமட்டில் சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ ஒரு கண்ணாடி மற்றும் மெட்டல் வடிவமைப்புடன் ஒரு 6 அங்குல முழு எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு கொண்ட சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயக்க அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ.!

மேலும் ஸ்மார்ட்போன் ஒரு 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 652 செயலியுடன் பொருத்தப்பட்ட 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது. கேலக்ஸி ஏ9 ப்ரோ 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய நினைவகத்தை வழங்குகிறது. இந்த தொலைபேசி அடிப்படையில் அண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயக்க முறைமையில் இயங்குகிறது.

இது 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 22.5 நாட்கள் வரை காத்திருக்கும் நேரம், 32.5 மணி நேரம் பேச்சு நேரம் மற்றும் 26 மணி நேரம் வரை வீடியோ பின்னணி நேரம் ஆகியவற்றை வழங்குகிறது. இதன் பேட்டரி 160 நிமிடங்களில் 0 முதல் 100% வரை பேட்டரி சார்ஜ் செய்யப்படுகிறது மற்றும் 30 நிமிடங்களில் 32% பேட்டரி சார்ஜ் செய்யப்படுகிறது என்று நிறுவனம் கூறுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா துறையை பொறுத்தமட்டில் ஆட்டோஃபோகஸ், எப்/1.9 துளை, ஓஐஎஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் ரியர் கேமராவை அதன் பின்புறத்தில் கொண்டுள்ளது. அதே நேரத்தில் முன்பக்கம் எப்/1.9 துல்லியத்துடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயக்க அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி ஏ9 ப்ரோ.!

இந்த ஸ்மார்ட்போன் ஒரு கைரேகை ஸ்கேனரை வழங்குகிறது. அளவீட்டில் இந்த சாதனம் 161.7 x 80.9 x 7.9 மிமீ மற்றும் 210 கிராம் எடையுடையது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம், 4ஜி-எல்டிஇ, ப்ளூடூத், வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட், சாம்சங் க்நொக்ஸ், எஸ்- வாய்ஸ் , ஸ்க்ரீன் மிரரிங், அக்ஸலெரோமீட்டர், கைரேகை சென்சார், ஜியோமெக்னட்டிக் சென்ஸார், ஹால் சென்சார், லைட் சென்சார் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A9 Pro with Android 7.0 Nougat spotted. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X