உலகின் முதல் 4 பின்புற கேமரா ஸ்மார்ட் போன் அறிமுகம்: சாம்சங் கேலக்ஸி ஏ9(2018)-விலை எவ்வளவு தெரியுமா?

சாம்சங் கேலக்ஸி ஏ9 (Samsung Galaxy A9 - 2018), என்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் போன் இன் சிறப்பு என்னவென்றால் "உலகின் முதல் பின்புற குவாட் கேமரா" வசதி தான்.

|

காட்ஜெட் பிரியர்களுக்கும், செல்பி பிரியர்களுக்கும் சாம்சங் நிறுவனம் நேற்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

உலகின் முதல் 4 பின்புற கேமரா ஸ்மார்ட் போன் அறிமுகம்:சாம்சங் கேலக்ஸி ஏ9

சாம்சங் நிறுவனம் நேற்று கோலா லம்பூர் இல் நடைபெற்ற தனது "4X FUN" நிகழ்ச்சியில் தனது அடுத்த புது மாடல் ஸ்மார்ட் போன்னினை அறிமுகம் செய்துள்ளது.

"உலகின் முதல் பின்புற குவாட் கேமரா"

சாம்சங் கேலக்ஸி ஏ9 (Samsung Galaxy A9 - 2018), என்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் போன் இன் சிறப்பு என்னவென்றால் "உலகின் முதல் பின்புற குவாட் கேமரா" வசதி தான். குவாட் கேமரா என்றால் நான்கு கேமரா என்பது பொருள், உலகின் முதல் நான்கு பின்புற கேமரா வசதியுடன் வெளியாகி இருக்கும் முதல் ஸ்மார்ட் போன் சாம்சங் கேலக்ஸி ஏ9 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

 8 ஜிபி ரேம்

8 ஜிபி ரேம்

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட் போன் இன் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இந்த ஸ்மார்ட் போன் 8 ஜிபி ரேம் சேவையுடன் 6.3 இன்ச் கொண்ட 18.5:9 விகித "பிக் இன்பினிட்டி டிஸ்பிளே"யுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிய திரை மட்டும் அதிக அளவு ரேம் சேவை மல்டிடாஸ்கிங் மற்றும் சிறந்த அனுபவத்திற்காக வழங்கப்பட்டிருப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) விபரக்குறிப்பு:

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) விபரக்குறிப்பு:

- 6.3' இன்ச் முழு எச்.டி பிளஸ் வசதியுடன் கூடிய 1080x2220 பிக்சல் கொண்ட 18.5:9 விகித சூப்பர் அமோலட்
இன்பினிட்டி டிஸ்பிளே
- 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி கார்டு மூலம் 512 ஜிபி விரிவாக்கச் சேமிப்பு வசதி
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் (எதிர்பார்க்கப்படுகிறது)
- உலகின் முதல் பின்புற குவாட் கேமரா சேவை
- 24 மெகா பிக்சல் மெயின் கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைட் கேமரா
- 10 மெகா பிக்சல் டெலிபோட்டோ கேமரா
- 5 மெகா பிக்சல் டெப்த் கேமரா
- 24 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா (எதிர்பார்க்கப்படுகிறது)
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- பேஸ் அன்லாக்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜி.பி.எஸ்
- என்.எப்.சி
- யு.எஸ்.பி டைப்-சி
- 3800 எம்.ஏ.எச் பேட்டரி

நிறம்: பாபுல்கம் பிங்க், கேவியர் பிளாக், மற்றும் லெமனேட் ப்ளூ
விலை: ரூ.51,300 முதல் ரூ.53,700 -க்குள் (எதிர்பார்க்கப்படுகிறது)

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018)

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018)

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட் போன் இன் இந்திய விலை விபரம் நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்படவில்லை. ஐரோப்பிய விலையின் படி சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட் போன், 599 யூரோவிற்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விலை

இந்திய விலை

இந்திய மதிப்பித்தில் ரூ.51,300 முதல் ரூ.53,700 என்ற விலையில், இந்திய சந்தையில் நவம்பர் முதல் விற்பனை செய்யப்படுமென்றும் ஏதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
amsung Galaxy A9 (2018) With Quad Rear Camera Setup Launched Price Specifications : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X