சாம்சங் கேலக்ஸி ஏ9(2018) ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அதன் ஸ்மார்ட்போன்களுக்கு விலையைக் குறைத்து வருகிறது, இதற்கு முன்பு கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு விலையைக் குறைத்தது அந்நிறுவனம். தற்சமயம் சாம்சங் கேலக்ஸி ஏ9(2018) ஸ்மார்ட்போனுக்கு விலையைக் குறைத்துள்ளது.

6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ9(2018) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.36,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.33,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று 8ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ9(2018) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.39,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.36,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டிஸ்பிளே:
சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.3-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080×2220 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்:
சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 24எம்பி+10எம்பி+8எம்பி+5எம்பி ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு
24எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி-இணைப்பு ஆதரவுகள்:
இந்த சாதனத்தில் 40000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, ப்ளூடூத் வி5 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:
சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது


Click it and Unblock the Notifications