நவம்பர் 20: இந்தியாவில் நான்கு கேமரா கொண்ட கேலக்ஸி ஏ9 அறிமுகம்.!
சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம் கடைசியில் நான்கு கேமரா கொண்ட கேலக்ஸி ஏ9 கொண்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் சிறந்த மென்பொருள் அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலைப் பொறுத்தவரை ரூ.35,000-ஆக உள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.3-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080×2220 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்:
சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 24எம்பி+10எம்பி+8எம்பி+5எம்பி ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு 24எம்பி செல்பீ
கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:
சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி-இணைப்பு ஆதரவுகள்:
இந்த சாதனத்தில் 40000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, ப்ளூடூத் வி5 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications