சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) மற்றும் கேலக்ஸி ஏ7 (2018) சாதனங்களுக்கு விலைகுறைப்பு.!

அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ7 (2018) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

|

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) மற்றும் கேலக்ஸி ஏ7 (2018) ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி 6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.22,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

8ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.25,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஏ9 (2018) மற்றும் கேலக்ஸி ஏ7 (2018) சாதனங்களுக்கு விலைகுறைப்பு

அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ7 (2018) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ7 (2018) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு 19,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்களை ஆஃப்லைன் தளங்களிலும் வாங்க முடியும்.

 சாம்சங் கேலக்ஸி ஏ7:

சாம்சங் கேலக்ஸி ஏ7:

சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் மாடல் 6-இன்ச் எப்எச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு 2.5டி பாதுகாப்பு கண்ணாடி அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

எக்ஸிநோஸ் 7885:

எக்ஸிநோஸ் 7885:

சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் 7885 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும். இந்த கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதில் 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 24எம்பி லோ லைட் கேமரா, 5எம்பி டெப்த் லென்ஸ் கேமரா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் 24மெகாபிக்சல் கொண்ட கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உண்டு. சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) விபரக்குறிப்பு:

சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) விபரக்குறிப்பு:

- 6.3' இன்ச் முழு எச்.டி பிளஸ் வசதியுடன் கூடிய 1080x2220 பிக்சல் கொண்ட 18.5:9 விகித சூப்பர் அமோலட் இன்பினிட்டி டிஸ்பிளே
- 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி கார்டு மூலம் 512 ஜிபி விரிவாக்கச் சேமிப்பு வசதி
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் (எதிர்பார்க்கப்படுகிறது)
- உலகின் முதல் பின்புற குவாட் கேமரா சேவை
- 24 மெகா பிக்சல் மெயின் கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைட் கேமரா
- 10 மெகா பிக்சல் டெலிபோட்டோ கேமரா
-5 மெகா பிக்சல் டெப்த் கேமரா
- 24 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- பேஸ் அன்லாக்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜி.பி.எஸ்
- என்.எப்.சி
- யு.எஸ்.பி டைப்-சி
- 3800 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
samsung-galaxy-a9-2018-and-galaxy-a7-2018-gets-up-to-rs-8000-price-drop: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X