மூன்று கேமரா, 6.39-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ்.!
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.39-இன்ச் இன்பினிட்டி டிஸ்பிளே ஆதவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் புதிய தொழில்நுட்ப கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.39-இன்ச் இன்பினிட்டி டிஸ்பிளே ஆதவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள், பெசல்-லெஸ் வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் எஸ்எம்-ஜி8870 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ்:
சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் பொதுவாக 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பா 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 710:
சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் சாதனம் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது அந்நிறுவனம்.
அதன்படி 24எம்பி+5எம்பி+10எம்பி உள்ளிட்ட கேமராக்கள் பின்புறம் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 24எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, ப்ளூடூத், கைரேகை சென்சார் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் விலைப் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications