சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் - இன்பினிட்டி ஓ டிஸ்பிளேயுடன் இன்று அறிமுகம்.! லைவா பாக்கலாம்.!

சாம்சங் நிறுவனம் இன்று தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ்(Samsung Galaxy A8s) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.

|

சாம்சங் நிறுவனம் இன்று தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ்(Samsung Galaxy A8s) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் இன்று அறிமுகம்.! லைவா பார்க்கலாம்.!

உலகின் முன்னணி நிறுவங்களின் தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் நிறுவனம் சீனாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று மாலை 4 மணிக்கு தனது நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் அறிமுகம் செய்கிறது.

இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே

இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே

இன்றைய நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன், உலகின் முதல் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Infinity-O Display) கொண்ட ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் பற்றிய டீஸர் பதிவுகளை வீபோ பக்கத்தில் சாம்சங் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு நேரடி ஒளிபரப்பு

இன்று மாலை 4 மணிக்கு நேரடி ஒளிபரப்பு

சாம்சங் நிறுவனம் இன்று மாலை நடைபெறவிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் இன் அறிமுக நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பும் செய்கிறது. இந்த நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு துவங்குகிறது. சாம்சங் நிறுவனத்தின் சீனா வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் விபரக்குறிப்பு:

சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் விபரக்குறிப்பு:

- 6.39' இன்ச் முழு எச்.டி கொண்ட 19.5:9 விகித இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே
- குயல்காம் ஸ்னாப்டிராகன் 710
- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 512 ஜிபி வரை எஸ்.டி கார்டு சேமிப்பு
- 24 மெகா பிக்சல், 5 மெகா பிக்சல் மற்றும் 10 மெகா பிக்சல் பின்பக்க கேமரா (எதிர்பார்க்கப்படுகிறது)
- 24 மெகா பிக்ஸ்ல முன்பக்க செல்பி கேமரா
- யு.எஸ்.பி டைப்-சி
- 3.5 ஆடியோ ஜாக்
- 3400 எம்.ஏ.எச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் பிளாக்-கிரேய் கிரேடியன்ட் நிறத்தில் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் இன் விலை பற்றிய உறுதியான தகவல்கள் இன்று மாலை தெரியவரும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A8s Launch Set for Today How to Watch Live Stream : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X