மிரட்டலான டிஸைனுடன் சாம்சங் கேலக்ஸி ஏ 82 5 ஜி ரெடி.. எப்போது அறிமுகம் செய்யப்படும்?

|

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ 82 5 ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருகிறது என்று இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து கூறப்பட்டு வருகிறது. இப்போது இந்த சாதனம் ப்ளூடூத் SIG பட்டியலில் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் டிசைன் இப்போதே பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 80 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ 80 ஸ்மார்ட்போன்

இது 2019ம் ஆண்டில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ 80 ஸ்மார்ட்போனின் வாரிசு என்றும், இதன் முதல் வெர்ஷன் தென் கொரியாவில் அறிமுகமானது. எதிர்பார்த்தபடி, சாம்சங் கேலக்ஸி ஏ 82 5 ஜி இப்போது பல்வேறு தரப்படுத்தல் மற்றும் சான்றிதழ் தளங்களில் காணப்பட்டுள்ளது என்பதை புளூடூத் எஸ்.ஐ.ஜி உறுதிப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-826S

ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-826S

இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-826S என்று குறிப்பிடப்பட்டு, இது புளூடூத் வி 5 இணக்கத்துடன் வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர மற்ற விவரக்குறிப்புகள் பற்றிய பெரிய விவரங்களை இதுவும் வெளியாகவில்லை என்றாலும், இது உருவாக்கப்பட்டு தயார்நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது என்று பட்டியல் காட்டுகிறது. சாம்சங் சாம்சங் கேலக்ஸி ஏ 82 5 ஜி பற்றி நமக்குக் கிடைத்துள்ள சில முக்கிய விவரங்களைப் பார்க்கலாம்.

ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையே இல்ல: இனி இந்த 18 சேவைகளும் ஆன்லைன் மூலம்தான்!ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையே இல்ல: இனி இந்த 18 சேவைகளும் ஆன்லைன் மூலம்தான்!

கீக்பெஞ்ச் பட்டியல் தகவல்

கீக்பெஞ்ச் பட்டியல் தகவல்

கடந்த வாரம், வதந்தியான சாம்சங் கேலக்ஸி ஏ 82 அதே மாதிரி எண்ணுடன் கீக்பெஞ்ச் பட்டியலில் காணப்பட்டது . இந்த பட்டியலில் இது ஆண்ட்ராய்டு 11 மற்றும் 6 ஜிபி ரேம் உடன் காணப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 855 அல்லது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், 2019 ஆம் ஆண்டில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ 82, ஸ்னாப்டிராகன் 730 ஜி சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசைனிற்கு நல்ல வரவேற்பு

டிசைனிற்கு நல்ல வரவேற்பு

சாம்சங் கேலக்ஸி ஏ 80 5ஜி ஸ்மார்ட்போன் தனித்துவமான கேமரா வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்புற கேமராக்கள் முன் கேமராக்களாக மேல்நோக்கி நகரும் விதத்தில் பிலிப்பிங் அம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனில் நாட்ச் எதுவும் இல்லாமல் முழுத்திரை டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ 82 5ஜி இன் இந்த டிசைனிற்கு நல்ல வரவேற்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A82 5G Spotted in Bluetooth SIG and Geekbench Listing : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X