சுழலும் கேமராவுடன் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! (விலை மற்றும் அம்சங்கள்)
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கேலக்ஸி ஏ80 சாதனம், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க சூழுலும் கேமரா மாட்யூல் வசதியுடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. பின்பு ஏஞ்செல் கோல்டு,கோஸ்ட் வைட் மற்றும் ஃபாண்டம் பிளாக் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி ஏ80 டிஸ்பிளே:
இந்த கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி சூப்பர் MOLED டிஸ்ப்ளே மற்றும் 2400x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த powered by Rubicon Project ஸ்மாரட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி ஏ80 சிப்செட்:
இக்கருவி ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் உடன் அட்ரினோ 618ஜிபியு அடங்கிய சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

48எம்பி பிரைமரி கேமரா
சூழுலும் கேமரா கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் மிக அருமையாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும், அதன்படி கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 3டி டெப்த் சென்சார் என மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.

இந்திய விலை மதிப்பு
கேலக்ஸி ஏ80 சாதனத்தில் 3700எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த சாதனத்தில் டால்பி அட்மோஸ் வசதி உள்ளது. பின்பு கேலக்ஸி ஏ80 சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.47,990-ஆக உள்ளது


Click it and Unblock the Notifications








