விற்பனைக்கு வந்தது அசத்தலான கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சூழலும் கேமரா மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனின் விலை
குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனின் விலை ரூ.47,990-ஆக உள்ளது, பின்பு தங்கம், வெள்ளை, கருப்பு நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங், அமேசான், பிளப்கார்ட் வலைதளங்களில் இந்த ஸ்மர்ட்போன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ80 டிஸ்பிளே:
இந்த கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
மற்றும் 2400x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மாரட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி ஏ80 சிப்செட்:
இக்கருவி ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் உடன் அட்ரினோ 618ஜிபியு அடங்கிய சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி ஏ80 கேமரா:
கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ80 சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி ஏ80 பேட்டரி:
கேலக்ஸி ஏ80 சாதனத்தில் 3700எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ,
வைபை,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications