டூயல் செல்பீ கேமராவுடன் அசத்தலான கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) அறிமுகம்.!
கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போனில் உள்ள டூயல் செல்ஃபி கேமராக்கள் குளோஸ்-அப், பேக்கிரவுண்டு, போர்டிரெயிட் மற்றும் லைவ் ஃபோகஸ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
மிகவும்அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பிளாக், ஆர்சிட் கிரே, கோல்டு மற்றும் புளூ உள்ளிட்ட நிறங்களில் கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது, அதன்பின்பு வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, கைரேகை சென்சார் வசதி போன்றவை இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போனில் உள்ள டூயல் செல்ஃபி கேமராக்கள் குளோஸ்-அப், பேக்கிரவுண்டு, போர்டிரெயிட் மற்றும் லைவ் ஃபோகஸ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது, மேலும் நவீன மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018):
சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) பொறுத்தவரை 6-இன்ச முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1080x2220) பிக்சல் தீர்மானம் மற்றும் 18:5:9 என்ற திரைவிகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆக்டோ-கோர்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் எக்சைனோஸ் 7885 14என்எம் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது

கேமரா:
கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போனில் 16 எம்பி+ 8 எம்பி கேமரா மற்றும் f/1.9 அப்ரேச்சர் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி
ரியர் கேமரா எல்இடி பிளாஷ், f/1.7 அப்ரேச்சர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் வி 5.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3500எம்ஏஎச்:
கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது

விலை:
கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.32,990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 20-ம் தேதி
முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications