Subscribe to Gizbot

டூயல் செல்பீ கேமராக்களுடன் சிக்கிய சாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) ப்ளஸ்.!

Written By:

சரியாக, ஒரு வாரத்திற்கு முன்பு சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8 (2018) ஸ்மார்ட்போனின் புகைப்படமொன்று அதன் மெல்லிய பெஸகள் மற்றும் அதன் இரட்டை கேமராக்கள் அமைப்பை வெளிப்படுத்தியது. அதனை தொடர்ந்து இப்போது அதே கருவியின் ப்ளஸ் மாறுபாடு முதல் முறையாக ஆன்லைன் மேல்தளத்தில் (விபோ வழியாக) வெளிப்பட்டுள்ளது.

டூயல் செல்பீ கேமராக்களுடன் சிக்கிய சாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) ப்ளஸ்.!

கூறப்படும் ஸ்மார்ட்போனின் நேரடி படங்களானது, அதன் பெரிய மற்றும் கிட்டத்தட்ட பெஸல்லெஸ் டிஸ்பிளேவை காட்சிப்படுத்துகிறது. வெளியான இரண்டு படங்களின் வழியே மேலும் என்னென்ன கண்டறியப்பட்டுள்ளதென்பதை விரிவாக காண்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குறைவான பெஸல்

குறைவான பெஸல்

கேள்விக்குட்பட்ட இந்த தொலைபேசியானது, 18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்பிளே அளவை கொண்டுள்ளது மற்றும் அது எஸ்எம்-ஏ730எப் /டிஎஸ் என்ற மாதிரி எண் கொண்டுள்ளது. ஒப்பீட்டளவில் இக்கருவியில் குறைவான பெஸல்களே காணப்படுகின்றன. ஆனால் சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய முதன்மை சாதனமான கேலக்ஸி நோட் 8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன்களின் அளவிற்கு பெஸல்லெஸ் கொண்டுள்ளது என்று கூறமுடியாது.

இரட்டை செல்பீ கேமரா

இரட்டை செல்பீ கேமரா

பெரிய டிஸ்பிளே தவிர ஒரு இரட்டை செல்பீ கேமராவையும் வெளியான புகைப்படத்தில் காணமுடிகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ8 (2018) ப்ளஸ் மாறுபாடாக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வாரம் முன்பு காணப்பட்ட கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) ஆனது 16எம்பி பின்புற கேமரா மற்றும் 16எம்பி முன்பக்க கேமரா கொண்டிருந்தது.

4 ஜிபி ரேம்

4 ஜிபி ரேம்

மேலும் கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) ஆனது, 4 ஜிபி ரேம் உடன் இணைந்த எக்ஸிநோஸ் 7885 சிங்கிள் கோர் செயலி மூலம் இயக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சேமிப்புத்துறையை பொறுத்தமட்டில்,மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32 ஜிபி உள் சேமிப்பு கொண்டு வரலாம். மிக அநேகமாக ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் இயங்கலாம்.

5.7 அங்குல தொடுதிரை டிஸ்பிளே

5.7 அங்குல தொடுதிரை டிஸ்பிளே

கேலக்ஸி ஏ8 (2018) ஸ்மார்ட்போனின் கசிந்த படங்களில், அதன் மிக மெல்லிய பெஸல்கள், 1920 × 1080 பிக்சல்கள் என்கிற தீர்மானம் கொண்ட ஒரு 5.7 அங்குல தொடுதிரை டிஸ்பிளே உடன் ஒரு இரட்டை செல்பீ கேமராவும் கொண்டு காணப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையான

முழுமையான" பெஸல்லெஸ்

இந்த 2 ஸ்மார்ட்போன்களை தவறிது, பிரபல டச்சு தொழில்நுட்ப தளமான லெட்ஸ்கோடிஜிட்டல் (LetsGoDigital) மூலம் ஒரு புதிய சாம்சங் விபோ (WIPO - உலகளாவிய சர்வதேச சொத்து அலுவலகம்) காப்புரிமைகள் வெளிப்படுத்தப்பட்டது. வெளியான தகவல் நிறுவனத்தின் முழுமையான பெஸல்லெஸ் ஸ்மார்ட்போன்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை விவரிக்கின்றன.

"முற்றிலும்" பூஜ்யம் பெஸல்

இதில் என்ன சுவாரசியம் என்றால் இன்றைய ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மூலம் கையாளப்படும் அர்த்தமற்ற (எதாவது ஒன்று செய்வது வடிவமைப்பை மாற்ற வேண்டுமென்ற கட்டாயத்தின் கீழ் கையாளப்படும்) பெஸல்லெஸ் வடிவமைப்பை போலின்றி இது "முற்றிலும்" பூஜ்யம் பெஸல்களை கொண்டுள்ளது.

சுமார் 180 டிகிரி வளைவு

சுமார் 180 டிகிரி வளைவு

இந்த வடிவமைப்பை சாம்சங் நிறுவனம், அதன் காப்புரிமையான டபுள்யூஓ / 2017/204483 கொண்டு எவ்வாறு அடைகிறது என்பதை கசிந்த புகைப்படம் காட்சிப்படுத்துகிறது. புகைப்படத்தின்படி சென்றால், பிரதான டிஸ்பிளேவின் மேல், கீழ் மற்றும் பக்கங்களானது சுமார் 180 டிகிரி வளைவு கொண்டிருக்கின்றன.

போல்டபிள் டிஸ்பிளே

போல்டபிள் டிஸ்பிளே

மறுகையில் உள்ள போல்டபிள் டிஸ்பிளே தொழில்நுட்பமானது, இனியுமொரு அறிவியல் புனைகதை அம்சமாக இருக்காது என்றே தோன்றுகிறது. ஆப்பிள் நிறுவனமும் போல்டபிள் ஸ்மார்ட்போன் பணிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், சாம்சங் நிறுவனம் மிக விரைவாக பணியாற்றும் என்பதும் உறுதி. ஆக மிக விரைவில் சாம்சங் நிறுவனத்தின் மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை நம் கைகளில் தவழலாம்.

கேலக்ஸி எக்ஸ்

கேலக்ஸி எக்ஸ்

2018 சாம்சங் நிறுவனத்தின் மூன்று புதிய கேலக்ஸி எஸ்9 மாதிரிகள் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூன்றாவது மாறுபாடான கேலக்ஸி எக்ஸ் ஆனது முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் ஒரு மலிவான கேலக்ஸி ஸ்மார்ட்போனாக வெளியாகுமென நம்பப்படுகிறது. புதுமைகளுக்கு பெயர்போன சாம்சங் நிறுவனம், வருகிற 2018-ஆம் ஆண்டில் என்னென்ன செய்யப்போகிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Samsung Galaxy A8 Plus (2018) to come with 18:9 display, dual selfie cameras. Read more about this in Tamil GizBot

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot